Skip to main content

Posts

Showing posts from June, 2023

ஆரோக்கியம் தரும் ரம்புட்டான் பழம்

செவ்வாழை எதற்கெல்லாம் பயன்படுகிறது...?அதில் உள்ள சத்துக்கள் எவை?

செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அரிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில்  தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும். குழந்தை பேறுக்காக காத்திருக்கும் தம்பதியினருக்கு செவ்வாழை அருமருந்தாகும். அவர்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன்  தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட பலன்  கிடைக்கும். உடலில் இரத்தணுக்களின் அளவை சீராக பராமரிக்க வேண்டியது அவசியம். அதற்கு செவ்வாழை மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும். சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்...

அடிக்கடி கை கால் மரத்து போவதற்கான காரணங்கள் என்ன....?

உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய் அல்ல இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம். குறிப்பாக நம் உடலில் எங்கயாவது மரத்து போனால் அது நம் மூளை, முதுகுத்தண்டு வடத்தில் ஏதேனும் பிரச்சனை என்ற அறிகுறியாகும். நம் உடலில் இரண்டு கால்களும் மரத்து போனால் அது சர்க்கரை நோய்களுக்கான அறிகுறியாகும். அதாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது என்ற அறிகுறியாகும். சிலருக்கு பல ஆண்டுகளாக இந்த மரத்துப்போதல் பிரச்சனை இருந்தால் அது மரபு அணுக்களின் கோளாறாக கூட இருக்கலாம். அதேபோல் ஏதேனும் ஆன்டிபயாடிக் மாத்திரை மற்றும் புற்று நோயை குணப்படுத்தும் மாத்திரை என்று தொடர்ந்து நீங்கள் மாத்திரை எடுத்து  கொண்டிருந்தாலும் கை, கால்கள் அடிக்கடி மரத்து போகும் பிரச்சனை ஏற்படும். தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தாலும் இந்த கை, கால்கள் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும். உடல் எடை அதிகரித்து  உடலில் அதிகளவு கொழுப்புகள் சேர்ந்தாலும் இந்த மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது. விட்டமின் B12 குறைபாடுகள் இருந்தாலும் இந்த கை கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும், அதேபோல் தொழுநோயால்...

தினம் ஒரு கீரையை உணவில் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்

நம்முடைய உணவில் தினம் ஒரு கீரையை சேர்ப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும். விட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினமும் ஒரு கீரை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ரத்த  சோகை பிரச்சினைக்கும் சிறந்த தீர்வு இந்தக் கீரை தான். கீரைகளை வாங்கிய பின் 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்டு அலசினால், அதில் உள்ள மண் போகும், பூச்சிக்கொல்லியின் வீரியம் குறையும். பூச்சிகள், கிருமிகள், பூச்சிக்கொல்லிகள், மாசு போன்றவற்றால் கீரைகள் பாதிக்கப்பட்டு வளர்வதால், கீரைகளை சமைப்பதற்கு முன்,  நீரில் நன்றாகக் கழுவுவது அவசியம். கீரைகளைப் பொரிக்கவோ, நீண்ட நேரம் வேக வைக்கவோ கூடாது. அதே நேரம், போதுமான அளவு வெந்திருக்க வேண்டும். கீரைகளை வேகவைக்க, சிறிது அளவு நீர் ஊற்றினாலே போதும். மழை, வெயில் என அனைத்துக் காலங்களிலும் கீரைகளை சாப்பிடலாம். ஆனால், அதன் இயல்பைப் பொறுத்து கீரைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இரவில் கீரை சாப்பிடவே கூடாது. கீரைகளில், நார்ச்சத்துகள் மிகுதியாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகாது. கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை ச...

பூண்டை அதிகளவு உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்

பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும். பால், பூண்டு, தேன் கலவையை தினமும் பருகி வர வயிற்றுக் கடுப்பு குணமாகும்.  அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது. காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும்  இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள்  விரைவில் சரியாகிவிடும். பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தால...

மஞ்சளின் மருத்துவமும் அதன் மகத்துவமும்

புதிதாகப் பறிக்கப்பட்ட மஞ்சளில் விட்டமின் சி உள்ளது. மஞ்சளில் பொட்டாசியம் இருப்பதினால் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. மஞ்சளில் தாதுப் பொருட்களான மாங்கனிஸ்,பொட்டாசியம், இரும்பு, கல்சியம். துத்தநாகம். தாமிரம்,  மெக்னீசியம், போன்றவை அடங்கியுள்ளன. மஞ்சள் தூளுடன் உப்பும் எலுமிச்சை சாறும் சேர்த்துப் பூசினால் புண், சுளுக்,கு, உரசல் காயங்கள், மூட்டு வலி குணமாகும். பெருங்காய தூளையும் மஞ்சள் தூளையும் நீரில் கலந்து கொதிக்க வைத்து வேது பிடித்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும். கெட்ட கொழுப்புக்களைக் கட்டுப்படுத்தும் எதிர் பொருட்கள் நார்ச் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதில் நியாசின், நிபோபிளவின். பைரிடாக்சின். சோலைனுள்ளிட்ட பல முக்கிய வேதியல் பொருட்கள் மஞ்சளில் அடங்கி உள்ளன. மூக்கடைப்பு ஏற்பட்டால் மஞ்சளைச் சுட்டு அதன் புகையை நுகர்ந்தால் மூக்கடைப்பு குணமாக்கும். கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது.  அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமல...

பல் கூச்சத்திற்கான முக்கிய காரணங்கள்

பல் கூச்சம் என்பது ஒரே நாளில் வரக்கூடிய பிரச்னை இல்லை. அது நாம் சரியாக பல்லை பராமரக்காத போதும், பற்களின் எனாமலில்  பாதிப்பு ஏற்படும்போதும் வரும். குளிர்ச்சியான உணவுகள் பற்களில் படும்போது ஏற்படும் கூச்சத்தை விட, சூடான உணவுகள் படும்போது  ஏற்படும் கூச்சம் ஆபத்தானவை. பற்களின் உட்புறம் ‘டென்டைன்’ என்று அழைக்கப்படுகிறது. எனாமல் தான் இந்தப் பகுதியை பாதுகாக்கும். எனாமல் பலவீனமாகி உடையும்  போது, சூடாக அல்லது குளிர்ச்சியான எந்த உணவுகளை உண்டாலும் வலி கொடுக்கும். பல் கூச்சமும் அதிகமாக இருக்கும்.  சூடான மற்றும் குளிர்ந்த உணவுகள் அல்லது மிகவும் இனிப்பான மற்றும் புளிப்பான உணவுகளை எடுத்துக் கொள்ளும் ஒரு வலி என்று இது குறிப்பிடப்படுகிறது. தீவிர நிலையில் குளிர்ந்த நீர் அருந்தினால் கூட இந்த வலி உண்டாகும். பல் கூச்சத்திற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று, பற்களின் மேலிருக்கும் எனாமல் அடுக்கு குறைந்து, கூழ் போன்ற மென்மையான பகுதிகளை வெளிப்படுத்தும். இந்த கூழ் பற்களின் உணர் நரம்புகளைக் கொண்டிருக்கும். இந்த பகுதி வெளிப்படும் போது சூடு, குளிர்ச்சி, இனிப்பு புளிப்பு போன்ற உணர்ச்சியை பல மடங்காக பெ...

உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை தேநீர் வகைகள்

பலரும் உடல் எடையை குறைக்க பணத்தை செலவழிக்கும்போது நாம் அன்றாடம் சாப்பிடும் மூலிகைகள் கொண்டு ஒரு தேநீர் குடித்தால் போதும். உடல் எடை சரசரவென குறையும். உடல் எடை குறைவதை விட முக்கிய பலன் ஒன்று உள்ளது. அது தான் உடலின் ஆரோக்கியம். மூலிகை தேநீர் செய்முறை: தினம் இந்த எளிமையான தேநீர்களில் ஒன்று அருந்தினால் கூட போதும் கிரீம் லோஷன் இல்லாமலே சருமம்  ஜொலிக்கும். 1.இஞ்சி தேநீர்  தேவையான பொருட்கள் : இஞ்சி - 2 அங்குலத் துண்டு ஏலக்காய் - 2 பால் - கால் கப் பனஞ்சர்க்கரை - ஒரு டீஸ்பூன். செய்முறை: இஞ்சியைத் தோல் சீவிச் சுத்தம்செய்யவும். ஏலக்காயைத் தட்டி இரண்டையும் ஒரு டம்ளர் நீரில் போட்டுக்கொதிக்கவிட வேண்டும். பாதியாக வற்றியதும் வடிகட்டி பால் பனஞ்சர்க்கரை சேர்த்துக் கலந்து அருந்தலாம். தினசரி காலையில் பருக ஏற்றது. 2. புதினா தேநீர்  தேவையான பொருட்கள் : புதினா இலை - 5 தேயிலை - ஒரு டீஸ்பூன் தேன் அல்லது பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன் பால் - கால் டம்ளர் (விருப்பப்பட்டால்). செய்முறை: ஒரு டம்ளர் நீரில் புதினா இலை தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி தேன் அல்லது  ப...

இயற்கை மருத்துவ குறிப்புகள்

நல்ல குரல் வளம் கிடைக்க ஆடாதோடையின் இலையை சிறிது சிறிதாக நறுக்கி 4 டம்ளர் தண்ணீர் விட்டு 1 டம்ளர் ஆகும் வரை காய்ச்சி  சிறிது தேன் கலந்து குடித்து வர வேண்டும்.